விரக்தியில் பேசுகிறார்கள்; கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில்!

14

சென்னை: ''தி.மு.க., கூட்டணி கட்சிகள் பிரிந்து வரும் என இலவு காத்த கிளி போல காத்து இருந்தார்கள். விரக்தியில் பேசுகிறார்கள்'' என தி.மு.க., கூட்டணி குறித்து இ.பி.எஸ்., கருத்துக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், ''தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த காலத்திலும் வளராது. கால போக்கில் கூட்டணி கட்சிகள் காற்றோடு காற்றாக கரைந்துபோகும். அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் உஷாராக இருங்கள்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்து இருந்தார்.



இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு திருமாவளவன் அளித்த பதில்: அது ஒரு விரக்தியின் வெளிப்பாடு. தி.மு.க., கூட்டணியில் இருந்து சில கட்சிகள் ''வெளியே வரும், வெளியே வரும்'' என இலவு காத்த கிளி போல காத்து இருந்தார்கள்.


அவ்வாறு நிகழவில்லை. நிகழாத விளைவினால் ,விரக்தியின் விளைவாக இத்தகைய கருத்துகளை சொல்லி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement