போதைப் பொருள் விற்றவர்கள் கைது

தேவகோட்டை : தேவகோட்டை காட்டூரணியைச் சேர்ந்த அகமது சாலத் மகன் மர்ஸ்க்அலி 24, பெரியார் நகர் கோரி முகமது மகன் காதர் மைதீன் 21, இருவரும் திருப்புத்துார் ரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்க்கின்றனர். இக்கடைக்கு இளைஞர்கள் அதிகளவில் வந்து சென்றுள்ளனர். இதை பயன்படுத்தி இருவரும் கூலிப் எனும் போதை பொருளை அங்கு வரும் இளைஞர்களிடம் விற்றுள்ளனர். போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து நேற்று மர்ஸ்க்அலி, காதர்மைதீன் இருவரையும் கைது செய்து இரண்டரை கிலோ கூலிப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement