மீண்டும் பா.ஜ.,வில் இணைவேன் விஜயேந்திராவுக்கு எத்னால் சவால்

ஹூப்பள்ளி : ''மீண்டும் பா.ஜ.,வில் இணைவேன்,'' என்று, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறினார்.

பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் ஹூப்பள்ளியில் நேற்று அளித்த பேட்டி:

விஜயேந்திரா பேச்சின் படி, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய தயார். ஹிந்து கடவுள் கொடியில் தேர்தலை சந்திப்பேன். எனக்கு முஸ்லிம் ஓட்டுகள் வேண்டாம். ஷிகாரிபுரா தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய அவர் தயாரா.

'நாங்கள் போட்ட பிச்சையால் தான் அவர் எம்.எல்.ஏ., ஆனார்' என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறினார். பிச்சை போட்டு வாங்கிய பதவி எதற்கு. தைரியம் இருந்தால் ராஜினாமா செய். குடும்ப அரசியலில் இருந்து பா.ஜ., விடுபட்ட பிறகு அக்கட்சியில் மீண்டும் இணைவேன்.

என்னை பற்றி விமர்சிக்க வேண்டும் என்றால், விஜயேந்திரா நேரடியாக பேசட்டும். ரேணுகாச்சார்யா போன்ற பன்றிகளை வைத்து பேச விட வேண்டாம். பன்றிகளை வீட்டிற்குள் வைத்திருக்க கூடாது; வெளியே தான் இருக்க வேண்டும். போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து சலுகைகளை பெற்ற, ரேணுகாச்சார்யாவுக்கு என்னை பற்றி பேச தகுதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement