அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு; பதிலுக்கு 84 சதவீத வரி விதித்தது சீனா!

15


வாஷிங்டன்: அமெரிக்காவின் பொருட்களுக்கு 34 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக வரியை சீனா உயர்த்தி உள்ளது. இதனால் இருநாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் தீவிரம் அடைந்துள்ளது.


அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், கடந்த ஏப்ரல் 2ம் தேதி பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவுக்கு 34 சதவீத வரி விதித்தது. அமெரிக்கப் பொருட்கள் மீது விதித்த 34 சதவீத பதிலடி வரியை திரும்பப் பெற சீனாவுக்கு 24 மணி நேர கெடு விதித்தார்.

சீனா பின்வாங்க மறுத்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா வரி விதித்ததற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்துள்ளதால் வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது.



அமெரிக்கா 104 சதவீத வரி விதித்ததற்கு பதிலடியாக சீனா தற்போது 84 சதவீத வரி விதித்துள்ளது. தற்போது 34 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக வரியை சீனா உயர்த்தி உள்ளது.இந்த புதிய வரி விதிப்பு ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என சீனாவின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement