தடுப்பு சுவரில் கார் மோதல் 4 பெண்கள் பரிதாப பலி

ஹூப்பள்ளி : தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில், நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.

ஹூப்பள்ளி டவுன் லிங்கராஜ் நகரை சேர்ந்தவர் வீரேஷ், 65. இவரது மனைவி சுஜாதா, 60. இவர்களின் உறவினர்கள் காயத்ரி, 67, சகுந்தலா, 72, சம்பத்குமாரி, 63. நேற்று காலை ஏதோ வேலை விஷயமாக ஐந்து பேரும், காரில் ஹாவேரிக்கு சென்றனர். வேலை முடிந்ததும் திரும்பி வந்தனர்.

மாலை 5:00 மணியளவில் ஹூப்பள்ளி ரூரல் நுால்வி கிராஸ் பகுதியில், கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடியது. சாலை தடுப்பு சுவரில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் கார் சின்னா பின்னமானது.

விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓடி சென்று, காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் நான்கு பெண்களும் இறந்தது தெரிந்தது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிய வீரேஷ் மீட்கப்பட்டு கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரை வேகமாக ஓட்டி வந்ததே, விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement