மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை

28


புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக,நாளை(ஏப்.10) இரவு தமிழகம் வருகிறார்.



பீஹாரில் இந்தாண்டு இறுதியிலும், மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் அடுத்த ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த மூன்று மாநிலங்களிலும் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது தேர்தல் குறித்து பா.ஜ., நி்ர்வாகிகளை சந்திக்க உள்ளார்.
அமித் ஷா பயண விபரம்:


அமித் ஷா, நாளை( ஏப்.10) இரவு 7.05 மணிக்கு புதுடில்லியில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்டு சாலைவழியாக பி.எஸ்.எப், இரவு 7.25 மணிக்கு விமான தளத்திற்கு வருகிறார். இரவு உணவுக்கு பின் இரவு 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.

அதை தொடர்ந்து அவர்,அங்கிருந்து சாலை வழியாக இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு சென்னையில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு வந்து இரவு தங்குகிறார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை(ஏப்.11)

காலை 10 மணி முதல் மாலை 4.20 மணி வரை ஹோட்டல் கிரான்ட் சோழாவில் முக்கிய நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெறுகிறது.

அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக மாலை 4.40 மணிக்கு சென்னை, மயிலாப்பூரில் உள்ள தியாகராஜபுரம் வருகிறார்.

அங்கிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அதை தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு டில்லி புறப்படுகிறார்.

Advertisement