பரப்பன அக்ரஹாரா சிறை 3 ஆக பிரிக்க அரசு ஒப்புதல்

பெங்களூரு : பாதுகாப்பு, நிர்வாக வசதிக்காக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையை மூன்றாக பிரிக்க, மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகாவில் ஒன்பது மத்திய சிறைகள் உட்பட 54 சிறைகள் உள்ளன. மொத்தம் 14,645 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் மட்டும் 4,800 பேர் உள்ளனர்.
இது, 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. முதன்மை சூப்பிரண்ட், ஒரு சூப்பிரண்ட், ஒரு உதவி சூப்பிரண்ட் உட்பட 800 போலீசார், ஊழியர்கள் இருக்க வேண்டும். தற்போது 400 பேர் மட்டுமே உள்ளனர்.
சிறையில் நடிகர் தர்ஷனுக்கு ராஜ உபசாரம் அளிக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, சிறை துறை புதிய டி.ஐ.ஜி.,யாக திவ்யாஸ்ரீயை மாநில அரசு நியமித்தது.
இந்நிலையில், சிறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தி, அரசுக்கு சமர்ப்பித்த மனுவில், 'பாதுகாப்பு நடவடிக்கைக்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையைதண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண்கள் சிறை என மூன்றாக பிரிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட மாநில அரசு, மூன்றாக பிரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
டி.ஐ.ஜி., திவ்யாஸ்ரீ கூறுகையில், ''மூன்றாக பிரிப்பதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் பிரிவு இடையே ஏற்கனவே மிகப்பெரிய சுவர் கட்டப்பட்டு உள்ளது. தனி சிறையாக, அதிக பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
மேலும்
-
ரூ.9 கோடி மதிப்புள்ள 900 கார் இயந்திரங்கள் திருட்டு: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்
-
அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்: அ.தி.மு.க., பா.ஜ., புறக்கணிப்பு
-
அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு; பதிலுக்கு 84 சதவீத வரி விதித்தது சீனா!
-
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை
-
கோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு; ரைட்டர் கைது
-
ஜிப்லி போட்டோக்களால் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம்: போலீசார் எச்சரிக்கை