வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கருப்பு பேட்ஜுடன் பணிபுரிந்த ஊழியர்கள்

தமிழக போக்குவரத்துத்துறையில் உள்ள, 12 சரகங்களில், வட்டார போக்குவரத்து அலுவலகம் - 91, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் - 56, சோதனைச்சாவடி - 22 உள்ளன.
இத்துறையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேற்று கருப்பு ஆடை, கருப்பு பேட்ஜ் அணிந்து பலரும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு நிர்வாகிகள் கூறியதாவது:
அரசாணைக்கு மாறாக, ஏ, பி, சி என்ற நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. 40 முதல், 50 பேருக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுகள், 5 பேருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. பணியிடம் காலியாக இருந்தபோதும், தகுதியுடையவர்களை கட்டாய காத்திருப்பில் வைத்துள்ளனர். ஏ, பி, சி நடைமுறைக்கு விலக்கு அளிக்க வேண்டும். கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்க வேண்டும்.
சமீபத்தில் வழங்கப்பட்ட இடமாறுதலில் விருப்பமின்றி பணியில் சேர்ந்தவர், சேராதவர்களுக்கு, கலந்தாய்வு முறையில் பணியிடம் வழங்க வேண்டும். கட்டாய காத்திருப்பு என்ற தேவையற்ற நடைமுறையை தவிர்க்க வேண்டும். அனைத்து பணியிடங்களுக்கும் தகுதியானவர் பட்டியலை தாமதமின்றி வழங்க வேண்டும்.
கண்காணிப்பாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் பதவி உயர்வு பட்டியல், 2023 - 24, 2024 -25ம் ஆண்டுகளுக்கு உடனே வெளியிட வேண்டும் என்பன உட்பட, 10 கோரிக்கைகளை வலியுறுத்தி, பணியாளர்கள் பலரும், கருப்பு ஆடை, கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

மேலும்
-
ஜொலிக்கும் ராகுல் தவிக்கும் ஆர்.சி.பி.,
-
40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி 2ம் இடம் பிடித்த கர்நாடக பெண்கள் அணி
-
12,500 அடி உயரம் கொண்ட கேதார்கந்தா மலை உச்சியை அடைந்த 8 வயது சிறுமி
-
கார் ரேசில் சாதனை படைக்கும் கர்ணா கடூர்
-
பீமகோலா தடுப்பணையில் தண்ணீர் சாகச விளையாட்டு
-
ஏழை குடும்பத்துக்கு வீடு கட்டி தந்த கிரிக்கெட் வீரர்கள்