பாட்மின்டன்: சாதிப்பாரா சிந்து * இன்று ஆசிய சாம்பியன்ஷிப் துவக்கம்

நிங்போ: பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சிந்து, லக்சயா சாதிக்க காத்திருக்கின்றனர்.
சீனாவில் பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் 42வது சீசன் இன்று துவங்குகிறது. 6 நாள் நடக்கும் இத்தொடரில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற சிந்து, இளம் வீரர் லக்சயா சென் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.
ஒலிம்பிக் போட்டிக்குப் பின் சிந்து ('நம்பர்-17'), இதுவரை எந்த தொடரிலும் சாதிக்கவில்லை. இம்முறை 36வது இடத்திலுள்ள இந்தோனேஷியாவின் ஈஸ்டர் நுாருமியை சந்திக்கிறார். தவிர மாளவிகா, அனுபமா, ஆகர்ஷி நேரடியாக முதல் சுற்றில் பங்கேற்கின்றனர்.
லக்சயா எப்படி
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-16' வீரர், இந்தியாவின் லக்சயா சென், ஆல் இங்கிலாந்து தொடரின் பைனலுக்கு முன்னேறிய சீன தைபே வீரர் லீ சியாவோ ஹாவோவை ('நம்பர்-14') எதிர்கொள்கிறார்.
ஒருவேளை லக்சயா சென் காலிறுதிக்கு முன்னேறினால், உலகின் 'நம்பர்-1' வீரர் சீனாவின் ஷி யு குவை சந்திக்க வேண்டும்.
மற்ற இந்திய வீரர்கள் பிரனாய், பிரியான்ஷு, கிரண் ஜார்ஜ் உள்ளிட்டோர் திறமை வெளிப்படுத்த உள்ளனர். ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பங்கேற்கவில்லை. பெண்கள் இரட்டையரில் திரீஷா-காயத்ரி, பிரியா-ஷ்ருதி ஜோடி களமிறங்குகின்றனர்.
மேலும்
-
உக்ரைன் ராணுவத்திடம் சிக்கிய சீனர்கள்; ரஷ்யா சார்பில் போரில் ஈடுபட்டது அம்பலம்
-
வரி உயர்த்தியது உயர்த்தியதுதான்: அதிபர் டிரம்ப் விடாப்பிடி
-
பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்: சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்கு
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் சரண்டர்; ஆயுதங்களும் ஒப்படைப்பு
-
காற்றில் கரையும் ஹூரியத் கூட்டமைப்பு:அமித் ஷா வருகை முன்னிட்டு 3 அமைப்புகள் விலகல்
-
ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி!