பைனலில் மோகன் பகான் * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்...

கோல்கட்டா: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுப் போட்டியில் மோகன் பகான், ஜாம்ஷெட்பூர் அணிகள் மீண்டும் மோதின. முதல் சுற்றில் 2-1 என வென்ற ஜாம்ஷெட்பூர், இப்போட்டியை 'டிரா' செய்தால் பைனலுக்கு சென்று விடலாம் என்ற நிலையில் களமிறங்கியது. மோகன் பகான் அணி குறைந்தது 2 கோல் வித்தியாசத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
போட்டியின் 51 வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் கையில் பந்து பட, மோகன் பகான் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதை கம்மிங்ஸ் கோலாக மாற்றினார்.
போட்டியின் கடைசி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (94 வது) மோகன் பகான் வீரர் ரால்டே ஒரு கோல் அடித்தார். முடிவில் மோகன் பகான் அணி 2-0 என வெற்றி பெற்றது.
இரண்டு சுற்று அரையிறுதி முடிவில், கோல் அடிப்படையில் 3-2 (1-2, 2-0) என முந்திய மோகன் பகான் அணி, பைனலுக்கு முன்னேறியது. இதில் பெங்களூருவை (ஏப். 12) சந்திக்க உள்ளது.
மேலும்
-
பாதசாரிகள் மீது கார் மோதியதில் 6 பேருக்கு காயம் : டில்லியில் மாணவர்கள் போராட்டம்
-
திரிணமுல் எம்.பி.,க்கள் கோஷ்டிச்சண்டை; கதறி அழுத மஹ்வா மொய்த்ரா!
-
உக்ரைன் ராணுவத்திடம் சிக்கிய சீனர்கள்; ரஷ்யா சார்பில் போரில் ஈடுபட்டது அம்பலம்
-
வரி உயர்த்தியது உயர்த்தியதுதான்: அதிபர் டிரம்ப் விடாப்பிடி
-
பிரியான்ஷ் ஆர்யா அதிரடி சதம்: சென்னை அணிக்கு 220 ரன்கள் இலக்கு
-
சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் சரண்டர்; ஆயுதங்களும் ஒப்படைப்பு