இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்

ஐதராபாத்: பிரிமியர் தொடரில் குஜராத் அணிக்காக பங்கேற்கிறார் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 36. ஐதராபாத்துக்கு எதிரான போட்டியின் போது, விதிகளை மீறி செயல்பட்ட இவருக்கு சம்பளத்தில் இருந்து 25 சதவீத அபராதம், ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில்,' போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள், மைதானத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தும் வகையில் நடந்தது கொண்டதால் 25 சதவீதம் அபராதம், ஒரு தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டது. இதை இஷாந்த் சர்மா ஏற்றுக் கொண்டார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement