சுயசான்று முறையில் 2 மாடி வீடு கட்ட அனுமதி; வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு
சென்னை : ''சுயசான்று முறையில் தரை தளம் மற்றும் இரண்டு தளங்கள் வரை வீடு கட்ட அனுமதி வழங்கப்படும்,'' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
l சுயசான்று முறையில் தற்போது தரை தளம் மற்றும் முதல் தளம் வரை வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. வாகனம் நிறுத்துவதற்கான இடவசதி ஏற்படுத்த, இனி தரை தளம் மற்றும் இரண்டு தளங்கள் வரை வீடு கட்ட அனுமதி வழங்கப்படும்
l சுயசான்று முறையில் கட்டட அனுமதி பெறுவோருக்கு உதவும் வகையில், நிலையான மனை அளவுகளுடன் கூடிய மாதிரி வரைபடங்கள், முகப்பு தோற்றங்கள், குறுக்கு வெட்டு தோற்ற மாதிரி வரைபடங்கள் உருவாக்கப்படும்
l குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலை கட்டட அனுமதி பெற, சுயசான்று முறை அறிமுகப்படுத்தப்படும். இதில், 5,381 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்
l வரிசை மற்றும் தொகுப்பு வீடுகள் கட்ட, 'செட்பேக்' எனப்படும் பக்கவாட்டு காலியிட விதிகள் தளர்த்தப்படும்
l கடந்த 2016 அக்டோபர் 20க்கு முன் உருவான, அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு, எந்த காலக்கெடுவும் இல்லாமல் வரன்முறை வாய்ப்பு வழங்கப்படும்
l நீர் நிலைகளை ஒட்டியுள்ள பள்ளி கட்டடங்களுக்கு, குறிப்பிட்ட சில நிபந்தனைகள் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்
l தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள பள்ளிகளுக்கு, பள்ளி நிர்வாகமே, 'சர்வீஸ் சாலை' ஏற்படுத்தினால், கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படும்
l கட்டுமான திட்ட அனுமதி பெறுவோர், உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி கட்டணங்கள் செலுத்துவதற்கான காலக்கெடு, 30 நாட்களில் இருந்து, 60 நாட்களாக அதிகரிக்கப்படும்
l தனி வீடுகளில் வாகன நிறுத்துமிடத்துக்கு தனி விதிகள் உருவாக்கப்படும்
l நகர் ஊரமைப்பு துறையில், முழுமை திட்டத்துக்கு தனிப்பிரிவு உருவாக்கப்படும்
l மலைப்பகுதிகளில் கட்டட அனுமதி மற்றும் பிற திட்டமிடல் பணிகளை வலுப்படுத்த, நகரமைப்பு வல்லுனர்கள், பொறியாளர்கள், கட்டடக் கலைஞர்கள், 25 தொழில்நுட்ப பணியாளர்கள் சேர்க்கப்படுவர்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
மேலும்
-
சித்திரை திருவிழா: வைகை அணையில் நீர் இருப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
வகுப்பறையில் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல்; மாணவன் மீது வழக்கு
-
'கச்சத்தீவை பிரதமர் மோடி மட்டுமே மீட்க முடியும்' ஜான்பாண்டியன் பேட்டி
-
பாலியல் வழக்கு: தொழிலாளிக்கு சிறை
-
வேலியில் பாய்ந்த மின்சாரம் மூன்று பேர் உயிரை பறித்தது