மூவர் கொலை வழக்கு விசாரணை தீவிரம்

திருப்பூர்; பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, 78, இவரது மனைவி அலமேலு, 75, மகன் செந்தில்குமார், 46 ஆகியோர் கடந்த நவ., 28ம் தேதி பண்ணை வீட்டில் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

வழக்கு, கடந்த மாதம், சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. கொலை நடந்த இடத்தை சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., ஸ்ரீதேவி தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் கேட்டபோது, ''இரண்டு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், கோவை, திருப்பூர், சேலம் என, மூன்று மாவட்டங்களை சேர்ந்த எட்டு இன்ஸ்பெக்டர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குறித்து தகவல் கிடைத்தது. அதுகுறித்து விசாரிக்கிறோம்'' என்றார்.

Advertisement