பணத்தை ஒப்படைத்த 'நேர்மை' வாலிபர்

திருப்பூர்; ஈரோட்டை சேர்ந்தவர் பவாஸ் அகமது, 33. இவர் சொந்த வேலை காரணமாக கோவைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் செங்கப்பள்ளி அருகே பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட சென்றார். அவர் அமர சென்ற டேபிளில், 12,700 ரூபாயை கண்டெடுத்தார்.

பணம் தொடர்பாக அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார். யாரும் பணம் குறித்து உரிமை கொண்டாடவில்லை. ஊத்துக்குளி போலீஸ் ஸ்டேஷனுக்கு பவாஸ் அகமது சென்றார்.

கண்டெடுத்த பணத்தை பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரின் நேர்மையை போலீசார் பாராட்டினர். பணத்தை தவற விட்டு சென்றது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement