பெருமாநல்லுாரில் இன்று குண்டம்

அனுப்பர்பாளையம்; பெருமாநல்லுாரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, இன்று அதிகாலை, 4:00 மணி முதல் துவங்கி நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
விழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் அம்மனுக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, குண்டம் திறந்து பூ வார்த்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.
இரவு சக்தி வேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், வீரமக்களுக்கு எண்ணெய் வழங்குதல், படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், குதிரையுடன் படைக்கலம் புறப்படுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
-
ஐகோர்ட் நீதிபதிகள் 769 பேர்; சொத்து விவரம் வெளியிட்டது 95 பேர்!
-
இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலையில் சரிவு; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி
Advertisement
Advertisement