சேலத்தில் போதை ஊசி விற்பனை 4 பேர் கைது; 1,100 மாத்திரை பறிமுதல்
சேலம்: சேலத்தில், போதை மாத்திரை, ஊசி விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையி-லான போலீசார், நேற்று முன்தினம் கஸ்துாரிபாய் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் நின்றிருந்த, மூவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்த திரவியன், 21, கவுதம்ராஜ், 19, கோகுல்ராஜ், 20, என்பதும் அவர்களிடம் இருந்து, 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவர்-களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சேலம் அரிசிபா-ளையத்தை சேர்ந்த கோகுல் என்ற சச்சின் என்பவர் தான், எங்க-ளுக்கு மாத்திரை கொடுத்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அரிசிபாளையம் சென்ற போலீசார் கோகுலை பிடித்தனர். அவரது வீட்டில் சோதனை செய்த போது, மொட்டை மாடியில் இருந்த, 1,100 போதை மாத்திரைகள், 15 ஊசி, எட்டு பாட்டில் மருந்து நீர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், மாத்திரை விற்பனைக்காக பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
கோகுலிடம் நடத்திய விசாரணையில், மும்பைக்கு சென்று குறைந்த விலையில் மாத்திரைகளை வாங்கி வந்து, இங்கு ஒரு மாத்திரை, 300 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்-தனர்.
மேலும்
-
அயோத்தி ராமர் கோவிலுக்கு இ-மெயிலில் மிரட்டல்; விசாரணையில் இறங்கிய போலீசார்
-
ராமதாஸ் மீது விமர்சனம்; பா.ம.க. பொருளாளருக்கு பொதுச்செயலாளர் கண்டனம்
-
கட்டுமான பணி கால அட்டவணையில் கவனம்; ஏற்ற இறக்கங்களை சரி செய்வது மிக அவசியம்
-
டில்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தடை: ஏப்ரல் இறுதியில் அமல்படுத்த திட்டம்
-
தே.ஜ., கூட்டணி தலைமையில் புதிய ஆட்சி: நயினார் நாகேந்திரன் உறுதி
-
பிரதமர் காட்டிய அக்கறை: பிரேமலதா நெகிழ்ச்சி