தே.ஜ., கூட்டணி தலைமையில் புதிய ஆட்சி: நயினார் நாகேந்திரன் உறுதி

13


கன்னியாகுமரி: ''தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி நிச்சயமாக மாற்றப்பட்டு, தே.ஜ., கூட்டணி தலைமையில், அடுத்தாண்டு புதிய ஆட்சி உதயமாகும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


கன்னியாகுமரியில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழ்ப்புத்தாண்டில் தமிழர்கள் அனைவரும் நலன் பெற வேண்டும் என்பது எனது எண்ணம். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சி நிச்சயமாக மாற்றப்பட்டு, தே.ஜ., கூட்டணி தலைமையில், அடுத்தாண்டு புதிய ஆட்சி உதயமாகும் என்பதை நான் நம்புகிறேன்.


Tamil News
அதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், எங்கு பார்த்தாலும் வெட்டு, குத்து, கொலை நடக்கிறது. அதில் மாற்றம் வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இ.பி.எஸ். தலைமையில் தே.ஜ., கூட்டணி தமிழகத்தில் பெரும்பான்மை வெற்றி பெறும்.


நான் திருநெல்வேலியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். ஆட்சியில் பங்கு என்பதை பற்றி இப்போது பேச முடியாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement