டில்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தடை: ஏப்ரல் இறுதியில் அமல்படுத்த திட்டம்

புதுடில்லி: 15 ஆண்டு பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்தும் திட்டம் இம்மாத இறுதியில் டில்லியில் அமல் செய்யப்பட உள்ளது.
டில்லியில் பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு வாகனங்களின் எண்ணிக்கையும் முக்கிய காரணம். பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கத்துடன், பழைய வாகனங்கள் மூலம் ஏற்படும் அதிகப்படியான காற்று மாசுவை கட்டுப்படுத்த முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்கள், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் ஆகியவற்றுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட உள்ளது.
ஆரம்பத்தில் ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. இருப்பினும், அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் நம்பர் பிளேட் எண் அடிப்படையில் வாகன விவரங்களை கண்டறியும் தானியங்கி கேமரா நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் அரசின் திட்டம் தள்ளிக்கொண்டே வந்தது. இந் நிலையில், டில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஆகியோர் திட்டத்தை அமல்படுத்து குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
தற்போது நகரின் 500 எரிபொருள் நிலையங்களில், 477ல் தானியங்கி கேமராக்கள் நிறுவப்பட்டு விட்டன. 23 மட்டுமே மீதமுள்ளன. அதுவும் அடுத்த 10 நாட்களுக்குள் தயார் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அரசின் தடை உத்தரவு இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி, டில்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களையும் தடை செய்யும் 2018 உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
சாஹல் சிறப்பான பந்துவீச்சு: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி
-
சிறுபான்மையினர் நலன் குறித்த உங்கள் வரலாற்றை பாருங்கள்: பாக்.,கிற்கு இந்தியா கண்டனம்
-
கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம்: பெண் ஊழியரின் செயல் இணையத்தில் வைரல்
-
ராபர்ட் வாத்ராவிடம் 6 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை: நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு
-
ரோகித் சர்மாவுக்கு கவுரவம்
-
ரசிகர்கள் மீது பட்டாசு வீச்சு * பெங்களூரு கால்பந்து அணி புகார்