பிரதமர் காட்டிய அக்கறை: பிரேமலதா நெகிழ்ச்சி

சென்னை; தமிழகத்தின் சிங்கம் என்று விஜயகாந்தை பிரதமர் மோடி அன்போடு அழைப்பார் என்று தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
@1brதமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் நகர ஆரம்பித்துள்ளன. அ.தி.மு.க.,, பா.ஜ., இடையே கூட்டணி அமைந்துவிட்டது. லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று அண்மையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்து இருந்தார்.
இந் நிலையில் பிரதமர் மோடியை புகழ்ந்து அவர் அளித்த பேட்டி ஒன்றை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று பிரதமர் அழைப்பார் என்று கூறி உள்ளார்.
பிரேமலதா மேலும் கூறி இருப்பதாவது;
விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும், மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று.
'தமிழகத்தின் சிங்கம்' என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று.
இவ்வாறு பிரேமலதா கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (6)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
14 ஏப்,2025 - 21:02 Report Abuse

0
0
Reply
Haja Kuthubdeen - ,
14 ஏப்,2025 - 18:14 Report Abuse

0
0
Reply
மணி - ,
14 ஏப்,2025 - 18:05 Report Abuse

0
0
Reply
Ganesun Iyer - ,இந்தியா
14 ஏப்,2025 - 17:58 Report Abuse

0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
14 ஏப்,2025 - 16:52 Report Abuse

0
0
மணி - ,
14 ஏப்,2025 - 20:46Report Abuse

0
0
Reply
மேலும்
-
சாஹல் சிறப்பான பந்துவீச்சு: பஞ்சாப் அணி த்ரில் வெற்றி
-
சிறுபான்மையினர் நலன் குறித்த உங்கள் வரலாற்றை பாருங்கள்: பாக்.,கிற்கு இந்தியா கண்டனம்
-
கழிப்பறை காகிதத்தில் ராஜினாமா கடிதம்: பெண் ஊழியரின் செயல் இணையத்தில் வைரல்
-
ராபர்ட் வாத்ராவிடம் 6 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை: நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு
-
ரோகித் சர்மாவுக்கு கவுரவம்
-
ரசிகர்கள் மீது பட்டாசு வீச்சு * பெங்களூரு கால்பந்து அணி புகார்
Advertisement
Advertisement