குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைக்கு முறையீடு

ஈரோடு: ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்க செயலர் பாரதி தலைமையில், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா-விடம், மனு வழங்கி கூறியதாவது:

மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த மார்ச், 31 வரை அவ-காசம் இருந்தது. ஆனாலும் முன்னதாகவே ஜே.சி.பி., வாகனம் மூலம் கட்டடத்தின் முன்புற வாயிற்படி இடித்தல், குழி தோண்டி வீட்டுக்குள் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்துதல், குடிநீர் இணைப்பை துண்டித்தல் போன்ற செயல்களில் அதிகா-ரிகள் ஈடுபடுகின்றனர். மாநகராட்சியில் பல ஆண்டுகளாக வரி பாக்கி வைத்துள்ளவர் மீது தான் சட்டப்பட்டி, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாதம் தாமதம் எனக்கூறி கந்துவட்டி போல வசூலிக்கும் முறையை கைவிட வேண்டும். இச்செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

Advertisement