அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரனுக்கு உடல் நலக்குறைவு

4

சென்னை: அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.



அ.ம.மு.க.,வின் பொதுச்செயலாளராக தினகரன் இருந்து வருகிறார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் வழக்கமான பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது கட்சியினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனை அறிக்கை



இது குறித்து டில்லி அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை: டி.டி.வி., தினகரனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை நடந்தது. நேற்று அனுமதிக்கப்பட்ட டி.டி.வி தினகரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement