கொடி நாள் நிதி ஒப்படைப்பு

புதுச்சேரி: பள்ளி கல்வித்துறையின் வட்டம்-4 அரசு தொடக்கப்பள்ளிகளில் திரட்டப்பட்ட கொடிநாள் நிதி, முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் வட்டம் 4ல் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் நிர்வாக அலுவலக பணியாளர்களிடமிருந்து 2024-25ம் ஆண்டிற்கான கொடி நாள் நிதியாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 435 ரூபாய் திரட்டப்பட்டது.

இதனை, முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன், வட்டம் 4, பள்ளி துணை ஆய்வாளர் திருவரசன், முன்னாள் துணை ஆய்வாளர் அமல்ராஜ் லீமாஸ், அலுவலக கண்காணிப்பாளர் லோகிதாசன் ஆகியோர் முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் சந்திரகுமரனிடம் நேற்று காசோலையாக வழங்கினர்.

இதில், முன்னாள் படைவீரர் நலத்துறை அலுவலர்கள் சுந்தரம், முருகதாஸ், ராமர், ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement