தி.மு.க.,வுக்கு பெண்கள் பதிலடி கொடுப்பர்: தினகரன் சாபம்

4

வேலுார்: வேலுார் மாவட்டம், காட்பாடியில் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:

தி.மு.க.,வில் யாரும் பெண்களை சமமாக மதிப்பதில்லை. இதற்கு, வரும் சட்டசபை தேர்தலில் பெண்கள் சரியான பதிலடி கொடுப்பர்.

அரசியலில் உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றனர். பின், அதை திரும்பப் பெறுவது போல, ஏற்கனவே இருந்த கூட்டணிக்கே வருகின்றனர்.

மக்களுக்காகவும், கட்சி நலனுக்காகவும் இப்படி முடிவெடுப்பது கட்டாயமாகி உள்ளது. பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இணைந்திருப்பதும் இப்படித்தான்.

அ.தி.மு.க.,வை அழித்து விடாமல் காக்கவே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பழனிசாமி திரும்பி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement