அற்புதமான சமுதாயத்தை  பெண்களால் உருவாக்க முடியும்

மதுரை : 'அன்பான குடும்பம், அற்புதமான சமுதாயத்தை பெண்களால் உருவாக்க முடியும்' என பரஞ்ஜோதி கோயிலின் சீடர் ஆஷ்ரிதா தாஸாஜி மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

மதுரையில் பரம்ஜோதி ஸ்திரீ சக்தி வரம் எனும் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை நேமத்தில் உள்ள பரஞ்ஜோதி கோயிலின் சீடர் ஆஷ்ரிதா தாஸாஜி பேசியதாவது:

இன்றைய நவீன உலகில் பெண்களின் பங்கு இன்றியமையாதது. பொறுப்பான தாயாக, அன்பான மனைவியாக அவர்களின் பங்களிப்பு முடிவில்லாத அங்கமாக உள்ளது. ஆதி காலத்தில் பெண்ணை ஆதி பராசக்தியாக வழிபட்டனர். இந்த அதீத சக்தியினால் பல அற்புத செயல்களை செய்யும் சக்தி படைத்தவளாக பெண் திகழ்ந்தாள். இன்றைய நவீன யுகத்தில் அந்த சக்தி செயலற்றுப் போய்விட்டது.

பெண்ணுக்குள் இந்த சக்தி விழித்தெழும்போது குடும்பம், சமுதாயம் சரியான பாதையில் பயணிக்கும். பெண்களே விழித்தெழுங்கள் கை கோர்த்திடுவோம்.'அன்பான குடும்பத்தை, அற்புதமான சமுதாயத்தை உருவாக்குவோம். என்றார். மதுரை பரம்ஜோதி பக்தர்கள் ஏற்பாடு செய்தனர்.

Advertisement