பள்ளி, கல்லுாரி செய்திகள்
பணி அனுபவ திட்டம்
பேரையூர்: ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவிகள் ஜெகன்ஆஷிலா, ஜெனிபர், கலைச்செல்வி, கனிகாஸ்ரீ, கரீஸ்மா, கார்த்திகா, கவிதா, காவியாஸ்ரீ, கீர்த்தனா உள்ளிட்ட மாணவிகள் டி.கல்லுப்பட்டி பகுதியில் வேளாண், வளங்கள் குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர். பி சுப்புலாபுரத்தில் மாணவி கார்த்திகா பசுந்தாள் உரம் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். மாணவி கீர்த்தனா வெள்ளரி மற்றும் புடலையில் பழ ஈக்கள் கட்டுப்படுத்துவதை செயல் விளக்கம் அளித்தார். வன்னிவேலம்பட்டியில் மாணவி காவியாஸ்ரீ மினி சோலார் லைட் ட்ராப் என்பது கரிம வேளாண்மையில் பூச்சி மேலாண்மைக்கு மிகவும் பயனுள்ள கருவிகளில் ஒன்றாகும் என விளக்கினார்.
கருத்தரங்கு
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரியில் கல்வி உரிமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். தி.மு.க., மாணவரணி மாநில செயலாளர் ராஜிவ்காந்தி பேசினார். துணை செயலாளர் பூர்ண சங்கீதா, தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாண்டி, நிர்வாகிகள் ஆதிசங்கர், மூவேந்தரன், மருதுபாண்டியன், செந்தமிழ்அரசி, கதிரவன் கலந்து கொண்டனர். கல்லுாரி தேர்வு கட்டுப்பாட்டாளர் துரைச்சாமி நன்றி கூறினார்.