மடைகள் பழுதால் பாசன நீர் வீண் விவசாயிகள் குமுறல்

மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

விவசாயிகள் பேசியதாவது : வெள்ளரிப்பட்டி வெள்ளரி கண்மாய், கொட்டகுடி பெருமாள் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி துார்வார வேண்டும். இ.மலம்பட்டியில் கருப்பணன் நெளிச்சான், பொட்ட குளத்தில் கோடை விவசாயம் செய்ய தண்ணீர் உள்ளது. ஆனால் 5 மடைகள் பழுதானதால் பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்த முடியாமல் வீணாகிறது. அதனால் மடைகளை மராமத்து பார்க்க வேண்டும். திருவாதவூரில் நெட்டியேந்தல் குளத்தை வருவாய்த்துறை ஆவணத்தில் நிலமாக மாற்றி உள்ளதை திருத்தம் செய்ய வேண்டும் என்றனர்.

மணி, கிருஷ்ணன், அருண், பழனி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement