கல்வெர்ட் அமைக்கும் பணி

புதுச்சேரி : உருளையன்பேட்டையில் கோவிந்தசாலை பகுதியில் வாய்க்கால் மீது இரும்பு கல்வெர்ட்டு அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட குபேர் நகர் வார்டு கோவிந்தசாலை, காமராஜர் வீதி, -அந்தோணியார் கோவில் தெரு, அரசு குடியிருப்பு இடைப்பட்ட பகுதியில் உள்ள வாய்க்கால் கல்வெர்ட்கள் சேதமடைந்துள்ளது.

அதையடுத்து, புதுச்சேரி நகராட்சி மூலம் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக இரும்பு கல்வெர்ட்கள் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான பணிகளை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement