அம்மன் நகர் பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா

கோவை; கோவை அம்மன்குளம் அம்மன்நகர் வடக்கு பகுதியில் உள்ள, பண்ணாரி அம்மன் கோவில், 33ம் ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடந்தது.

கடந்த மாதம், 24ம் தேதி பூக்கம்பம் நட்டு பூச்சாட்டு விழா துவங்கியது. இதை தொடர்ந்து 15 நாட்களாக, தினமும் அம்மனுக்கு திருவிளக்கு பூஜை, சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் திருவிழா நேற்று துவங்கியது. பண்ணாரி அம்மன் சப்பரத்தில் அமர்ந்து, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சக்தி கரகத்துடன் முதன்மை பூசாரி அக்னி குண்டத்தில் இறங்கினார். பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து குண்டத்தில் இறங்கினர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி, அருள் பெற்றனர்.

Advertisement