அண்டா மாயம்; மோர் நிறுத்தம்

கோவை; கலெக்டர் அலுவலக வளாகத்தில் அன்றாடம் மக்களுக்கு, இலவசமாக வழங்கி வந்த நீர்மோர் சேவை, திடீரென்று நிறுத்தப்பட்டது. விசாரித்தபோது, மோர் கலக்கி வைக்கும் அண்டா மாயமானது தெரியவந்தது.

தினமும் மதியம் 1:30 மணி வரை, நீர்மோர் ஊற்றப்படும். அதன் பின், அந்த பாத்திரங்கள், பிளாஸ்டிக் டிரம், ஜக், டம்ளர், டேபிள், தற்காலிக டென்ட் ஆகியவை, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே பாதுகாக்கப்படும்.

இந்நிலையில் யாரோ சிலர், மோர் ஊற்றி வைக்கும் அண்டா, பிளாஸ்டிக் டிரம், எவர்சில்வர் ஜக், டம்ளர்கள், டென்ட் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இதனால் நேற்று வெயில் சுட்டெரித்தும், யாருக்கும் 'ஜில்' மோர் கிடைக்கவில்லை.

கலெக்டர் அலுவலகத்தில் பகல், இரவு என செக்யூரிட்டி பணி மேற்கொள்ளும் நால்வரும், தங்களுக்கு ஏதும் தெரியாது என கைவிரிக்கின்றனர்.

Advertisement