56வது வார்டுக்கான ஓட்டுச்சாவடி பட்டியல்

கோவை; கோவை மாநகராட்சியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள, 56வது வார்டில் அமைக்கப்படும், 16 ஓட்டுச்சாவடிகள் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள, 56வது வார்டுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை, தேர்தல் பிரிவினர் செய்து வருகின்றனர். வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஓட்டுச்சாவடி விபரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி, மாநகராட்சி 56வது வார்டில் அமைய உள்ள ஓட்டுச்சாவடி பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, விமான நிலைய ரோட்டில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, ஒண்டிப்புதுார் வடக்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ஒண்டிப்புதுார் தெற்கு ராமசாமி செட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளி வளாகத்துக்குள், 16 ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. இவற்றின் நகல், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன.

Advertisement