வங்கி வேலை நாள் அறிவிப்பு; தொழில் வர்த்தக சபை வரவேற்பு
கோவை; வங்கி ஊழியர்களுக்கு வாரத்துக்கு 5 நாட்கள்தான் வேலை என்ற திட்டம், நடப்பு நிதியாண்டில் அமல்படுத்தப்பட மாட்டாது என, மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளதற்கு, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை, வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
வங்கி ஊழியர்கள் வாரத்துக்கு 5 நாட்கள் பணிபுரிந்தால் போதுமானது என்ற கொள்கை, பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. வங்கிப் பணிகளை பாதிக்கும் என்பதால், இந்தக் கொள்கை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்தப்படாது என, மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
தொழில்துறையினர் சார்பாக, கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை இதனை வரவேற்கிறது. வங்கி வேலை நாட்களை வாரத்துக்கு 5 நாட்களாக குறைப்பது, வங்கிச் செயல்பாடுகளையும், வாடிக்கையாளர் சேவையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சரியான நேரத்தில், மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒட்டுமொத்த நிதித்துறையிலும், வங்கி என்பது முக்கியமான ஓர் அங்கமாகும். வார நாட்களில், வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டிய சூழல் வங்கிகளுக்கு உள்ளது.
டிஜிட்டல் வங்கித் தளங்கள், சந்திப்பு நேரங்களை உறுதி செய்வது உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும். பொருளாதார நிலைத்தன்மைக்கு, வலுவான வங்கிக் கட்டமைப்பு அவசியம். இது, வணிகம் மற்றும் தனி நபர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
வங்கி வேலை நாட்களை வாரத்துக்கு 5 நாட்களாக குறைப்பது, வங்கிச் செயல்பாடுகளையும், வாடிக்கையாளர் சேவையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சரியான நேரத்தில், மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்