சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; முதியவர் 'போக்சோ'வில் கைது

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே 9 வயது சிறுமியை, பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவரை, போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 9 வயது பள்ளி சிறுமி. இவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்து, வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கடை ஒன்றின் வாசலில், மேட்டுப்பாளையம் உக்கான் நகரை சேர்ந்த மணி, 65, உட்கார்ந்து இருந்தார்.

அவர் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். புகாரின்படி, மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப் பதிந்து நேற்று மணியை கைது செய்தனர்.

----

Advertisement