கடற்கரையை மேம்படுத்த பா.ஜ.,தலைவர் கவர்னரிடம் மனு

புதுச்சேரி: புதுச்சேரி அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால், கடற்கரையை மேம்படுத்த வேண்டும் என பா.ஜா., மாவட்ட, நகர தலைவர் கவர்னரிடம் மனு அளித்துள்ளார்.

புதுச்சேரி பா.ஜ., மாவட்ட நகர தலைவர் கிருஷ்ணராஜ், கவர்னரிடம் அளித்துள்ள மனுவில்,

புதுச்சேரிக்கு அதிகளவில், சுற்றுலா பயணிகள் வருகின்றனர் எனவே கடற்கரை சாலையில் கூடுதலாக மின் விளக்குகள் அமைக்க வேண்டும். அந்த பகுதியில், மின் கம்பங்களில் இருந்து மின் ஒயர்கள் வெளியில் தெரியும் வகையில் உள்ளதால், அதை சரி செய்ய வேண்டும். சாலையில், போன்சாய் மரங்களை பராமரித்து, அழகுப்படுத்த வேண்டும்.

மேலும், கடற்கரை ஓரப்பகுதியில், சுற்றுலா பயணிகள் அமர்ந்து ரசிப்பதற்கு குடில்கள் அமைக்க வேண்டும். கூடுதலாக நவீன கழிப்பறை வசதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை ரசித்து பார்க்க, சாய்வு தளம் அமைக்க வேண்டும். அதிக மக்கள் கூடுவதால், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் நிறுத்த வேண்டும்.

பாதுகாப்பிற்கு பகல், இரவு நேரங்களில், கூடுதலாக ஆண், பெண் போலீசார் நியமித்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Advertisement