தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலுார் : தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடாஜலபதி துவக்க உரையாற்றினார். கிளை தலைவர் ரமேஷ் விளக்க உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் அரிகிருஷ்ணன், மகளிர் தலைவர் துளசி பேசினர். தேர்தல் வாக்குறுதியின்படி திட்ட தொகுப்பூதிய பயிற்றுநர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
2005ம் ஆண்டு பணியில் சேர்ந்த பணிமனை உதவியாளர்களின் தொகுப்பூதிய காலத்தை பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பொருளாளர் சதீஷ் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
Advertisement
Advertisement