5 மாதமாக ரேஷன் கார்டு கிடைக்கல பண்ருட்டி தாலுகா மக்கள் தவிப்பு

மாவட்டத்தில் புதியதாக திருமணம் ஆனவர்கள், தனி குடித்தனம் சென்றவர்கள் என பல பேர் புதிய ரேஷன் அட்டை கோரி அந்தந்த தாலுகாவில் விண்ணப்பம் செய்கின்றனர்.

விண்ணப்பங்களை வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து, தகுதியான நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்குவர். அந்த வகையில், பண்ருட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ரேஷன் கார்டு கேட்டு ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.

இவர்களில் தகுதியானவர்களுக்கு ரேஷன் அட்டை தயாராகியுள்ளதாக பயனாளிகளுக்கு ஆறு மாதத்துக்கு முன் குறுஞ்செய்தி அனுப்பினர். ரேஷன் அட்டை கிடைத்து விட்டது என பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், 5 மாதங்களாகியும் அட்டை வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆனால், இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்து புயல் நிவாரணம், பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை வாங்கினர்.

ஆனால் மாதந்தோறும் பொருட்கள் வாங்க முடியவில்லை. அமைச்சர் முன்னிலையில் கார்டுகள் வழங்கவதற்காக பொதுமக்களுக்கு அட்டையை வழங்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




- நமது நிருபர் -

Advertisement