பாலக்காடு - திருச்சி ரயில் 14 நாள் இயக்கம் மாற்றம்

திருப்பூர்; சேலம் ரயில்வே கோட் டத்தில் நடக்கும் பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக, பாலக்காட்டில் இருந்து கோவை, திருப்பூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும் ரயில் இயக்கம், 14 நாட்களுக்கு மாற்றப்படுகிறது.

பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்:16844) வரும், 10 முதல் 18ம் தேதி வரை; 21 முதல் 25ம் தேதி வரை என, மொத்தம், 14 நாட்கள், வழக்கமான வழித்தடமான கோவை ஜங்ஷன், கோவை வடக்கு மற்றும் பீளமேடு ஸ்டேஷன் வழியாக இயக்கப்பட மாட்டாது. மாறாக, பாலக்காட்டில் இருந்து போத்தனுார் வழியாக இருகூர் வந்து, திருப்பூர் வந்தடையும்.

வரும், 15, 18, 22, 24, 26 மற்றும் 29 ம் தேதி, கரூர் வரை மட்டும் ரயில் இயக்கப்படும். இதனால், கரூர் - திருச்சி இடையே இயங்காது. வரும், 12, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு புறப்படும் ரயில் (எண்:16843) சூலுார் ஸ்டேஷனில் நிறுத்தப்படும்.

கோவை வழியாக, பாலக்காடு செல்லாது. வரும், 25ம் தேதி, திருப்பூரில் நிறுத்தப்படும்; திருப்பூர் - பாலக்காடு இடையே ரத்து செய்யப்படுகிறது.

Advertisement