தாயால் கைவிடப்பட்ட குழந்தை; தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை, தர்மபுரி தத்துவள மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தை குறித்து தகவல் தெரிந்தோர் 30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரியை சேர்ந்த சக்திவேல், 34 என்பவரின் மனைவி சுமதி, 32. கர்ப்பிணியான சுமதிக்கு, கடந்த மார்ச் 16ம் தேதி, திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்டில் ஆண் குழந்தை பிறந்தது. தாய், குழந்தை இருவரும் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சுமதி, தனது குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு, தகவல் தெரிவிக்காமல் வெளியேறிச்சென்றுவிட்டார். குழந்தைக்கு, வேந்தன் என பெயர்சூட்டப்பட்டு, தர்மபுரி மாவட்டத்திலுள்ள தத்துவள மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள், 30 நாட்களுக்குள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை, 0421 - 2971198, 63826 14772 எண்களிலும், குழந்தைகள் நலக்குழுவை, 0421 - 2424416 என்கிற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். குழந்தை சேர்க்கப்பட்டுள்ள தர்மபுரி நிர்மலா ஆர்பனேஜ் சென்டரை, 94459 12961, 95665 41371 எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். 30 நாட்களுக்குள் யாரும் தொடர்புகொள்ளாதபட்சத்தில், சட்டப்படி குழந்தை தத்து கொடுக்கப்படும் என, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

Advertisement