உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா; 'ஓம் சக்தி' கோஷம் முழங்க திருக்கம்பம் எழுந்தருளல்

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் உற்சவ நிகழ்ச்சிகள் நடந்து வந்த நிலையில், நேற்று திருக்கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, விநாயகர் கோவில் கிணற்றில், திருக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட திருக்கம்பம், பக்தர்கள் சூழ, இசை வாத்தியங்கள் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பக்தர்களின், 'ஓம் சக்தி' 'ஓம் நமசிவாயா' கோஷங்கள் முழங்க, அம்மனுக்கு முன், திருக்கம்பம் ரூபத்தில் சூலத்தேவர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
வரும், 11ம் தேதி காலை, 12:30க்கு கொடியேற்றம் நிகழ்ச்சியும், மதியம், 2:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி துவங்குகிறது.
வரும், 15ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நிறைவும், 16ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு, பிற்பகல், 3:00 மணிக்கு, சூலத்தேவருடன் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும், 17ம் தேதி, மாலை, 4:15 மணிக்கு நடக்கிறது.
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்