சாக்கலுாத்து மெட்டு ரோடு அமைக்க கோரி கேரள எம்.பி.யுடன் இணைந்து நடைபயணம் எம்.பி., தங்கதமிழ்செல்வன் தகவல்
தேனி : தேவாரம் சாக்கலுாத்து மெட்டுரோடு அமைக்க கோரி கேரளா, கொல்லம் எம்.பி.,யுடன் இணைந்து நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கை சந்தித்த பின் செய்தியாளர் சந்திப்பில் எம்.பி., கூறியதாவது: மாவட்டத்தில் 28 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
கோடைகாலத்தில் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க வேண்டும். 18 ம் கால்வாய் திட்டத்தின் மூலம் போடி பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கான இடத்தேர்வு நடக்கிறது. இந்தாண்டு பள்ளி துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைந்த நிலைப்பாடு இல்லை. ஜல்ஜீவன் திட்டம் 90 சதவீதம் நிறைவடைந்ததாக கூறுகின்றனர். இன்னும் பல குறைகள் உள்ளது. இது பற்றி திஷா கமிட்டி கூட்டத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தேவாரம் சாக்கலுாத்து மெட்டு பாதை 6 கி.மீ.,ரோடு அமைப்பது தொடர்பாக லோக்சபாவில் கொல்லம் எம்.பி.,யுடன் இணைந்து மனு அளித்துள்ளேன்.
வனத்துறை அனுமதி கேட்டுள்ளோம். இருவரும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். ஏப்.,22ல் நடக்கும் ரயில்வே கமிட்டி கூட்டத்தில் ரயில்வே தொடர்பான கோரிக்கைகளை முன்வைப்பேன் என்றார்.
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்