காட்பாடி யார்டு பராமரிப்பு பணி ரயில் சேவையில் மாற்றம்
விழுப்புரம் : காட்பாடி யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மண்டல ரயில்வே பி.ஆர்.ஓ., வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பு;
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (9ம் தேதி) மற்றும் 11ம் தேதிகளில் மாலை 6:10 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - காட்பாடி இடையிலான ரயில் (வண்டி எண்- 66026) வேலூர் கண்டோன்மென்ட்டில் குறுகிய காலத்திற்கு நிறுத்தப்படுகிறது.
இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டிற்கு மட்டும் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூரிலிருந்து மாலை 6:00 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை ரயில் ( வண்டி எண்- 66033), இன்று (9ம் தேதி) மற்றும் 11ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்படும் ரயில் ( வண்டி எண்- 66034) தாம்பரம் ரயில் நாளை (10ம் தேதி) மற்றும் 12ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்