பிரியாணி தாமதமாக வாங்கி வந்ததால் கணவர் மீது கோபத்தில் மனைவி தற்கொலை
வில்லியனுார் : பிரியாணி தாமதமாக வாங்கி வந்ததால், கணவர் மீதான கோபத்தில் மனைவி துாக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கற்பக வினாயகர் சிட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மீனா, 36. இவர்களுக்கு 9 மற்றும் 6 வயதில் இரு மகன்கள் உள்ளனர். ரமேஷ் திருக்காஞ்சி பகுதியில் வீடு ஒன்று வாங்கி அதனை சரிசெய்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை கொத்தனாரிடம் வாங்கி கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது மீனா சமையல் செய்யாமல் இருந்தார். அதனை தொடர்ந்து ரமேஷ் மதியம் 1:00 மணியளவில் வில்லியனுாருக்கு சென்று பிரியாணி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர், பிற்பகல் 3:00 மணிக்கு மேல் பிரியாணியுடன் வந்ததார். இதனால் மீனா கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் இருந்தார்.
ரமேஷ் வெளியே சென்று, மாலை வீட்டிற்கு வந்தபோது, மின் விசிறியில் புடவையால் துாக்குப்போட்டு மீனா தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை மீட்டு, வில்லியனுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார். ரமேஷ் புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்