ஆண்டு விழா

தேவகோட்டை : தேவகோட்டை புளூ டால்பின் மழலையர் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் அந்தோணி சேவியர் தலைமையில் நடந்தது.

நிறுவனர் ராஜன், தாளாளர் மங்கையற்கரசி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் நிட்டில் வரவேற்றார். துணை தலைமையாசிரியை நபிலாபானு அறிக்கை வாசித்தார். கவுன்சிலர் தனலட்சுமி, காஸ்மாஸ் லயன்ஸ் தலைவர் பாலமுருகன், ரோட்டரி நிர்வாகி சொர்ணலிங்கம் பரிசுகள் வழங்கினர். ஆசிரியை ஜமீமா நன்றி கூறினார்.

Advertisement