சுப்பிரமணியர் கோவிலில் நாளை திருக்கல்யாணம் 

புவனகிரி : கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை திருக்கல்யாணம் நடக்கிறது.

கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினசரி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

நாளை (10ம் தேதி) இரவு 7:00 மணி முதல் 9:.00 மணிக்குள் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

11ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு அகவல் பாராயணம், ஜோதி தரிசனும், 7:00 மணிக்கு காவடி உற்சவம் நடக்கிறது. மதியம் 1:.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. இரவு 9:30 மணிக்கு உற்சவமூர்த்தி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement