பல ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க மனு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவில் வசிக்கும் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனு: கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வீட்டு வரி, மின் கட்டணம், சொத்து வரி ஆகியவை தொடர்ந்து முறையாக செலுதி வருகிறோம். அனுபவ பாத்தியமாய் வசித்து வருகிறோம்.

தாங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்ககோரி பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. எனவே, நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement