சிறப்பாறையில் மழைக்கு பசு பலி

தேனி : மாவட்டத்தில் ஏப்.,6 கன மழை பதிவானது. ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும் பாறை அருகே கடமலைக்குண்டு சிறப்பாறை கிராமத்தில் தங்கமலை என்பவர் மாட்டுத்தொழுவத்தில் இரும்பு சீட் சரிந்தது.

இந்த சீட் அங்கு கட்டப்பட்டிருந்த பசுவின் கழுத்தில் வெட்டியதில் பசு உயிரிழந்தது. அதே போல் பெரியகுளம் தாலுகாவில் ஒன்று , உத்தமபாளைம் தாலுகாவில் 3 என மொத்தம் 5 வீடுகள் சேதமடைந்தன.

சேதமடைந்த வீடுகள், பசுவிற்கு நிவாரணம் வழங்க வருவாய்த்துறையினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

Advertisement