கள்ளக்குறிச்சியில் தி.மு.க., கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, நான்கு முனை சந்திப்பில், தமிழக கவர்னர் ரவிக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததையொட்டி, நகர்மன்ற சேர்மன் சுப்ராயலு தலைமையில், மலையரசன் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி முன்னிலையில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மாவட்ட துணை செயலாளர் காமராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் ரஞ்சித், மாணவரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், நகர துணை செயலாளர்கள் அப்துல்ரசாக், உமாவெங்கடேசன், நகர அவைத்தலைவர் அப்துல்கலீல், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், நகர சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஷாகுல் ஹமீது, நகர்மன்ற கவுன்சிலர்கள் மீனாட்சி, விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement