ஊராட்சி செயலர் சங்க கூட்டம்

சிங்கம்புணரி : தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்க சிங்கம்புணரி ஒன்றியக் கிளை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஒன்றியத் தலைவராக மகேஷ், செயலாளராக நாகராஜன், பொருளாளராக ருக்மணி, துணைத்தலைவராக சர்மிளா, இணைச் செயலாளராக தமிழ்மாறன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில், ஊராட்சி செயலர்களை தமிழக அரசு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும், ஊரக வளர்ச்சித் துறை ஆணையரின் அறிவுறுத்தல் படி, அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் அளிக்க வேண்டும், ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement