திருமங்கலத்திற்கு தண்ணீர்

1

சென்னை:சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க.,- உதயகுமார்: திருங்கலம் நகராட்சி, மதுரை மாநகராட்சிக்கு அருகில் உள்ளதால், அப்பகுதி விரிவடைந்து கொண்டே செல்கிறது. தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளதால், சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

அமைச்சர் நேரு:
பெரியாறு அணையில் இருந்து, மதுரைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஐந்து டேங்க் கட்ட வேண்டும். அப்போது அருகில் இருக்கும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement