ரேஷன் கடைகளுக்கு தரச்சான்று வழங்கல்

சென்னை:கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்களால், 35,039 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. அவற்றை சீரமைத்து, கார்டுதாரர்களுக்கு சிறந்த சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


இதற்காக, ரேஷன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ., 9001 தரச்சான்று பெறப்படுகிறது. இதுவரை, 10,149 ரேஷன் கடைகளுக்கு இந்த சான்று பெறப்பட்டுள்ளது. எஞ்சிய கடைகளையும் சீரமைத்து, விரைந்துதரச்சான்று வாங்குமாறு அதிகாரிகளுக்கு, கூட்டுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது.

Advertisement