'போக்சோ' வழக்கு தடயங்கள் ஆய்வுக்கு பிரத்யேக பிரிவு

சென்னை:பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்கு தடயங்களை ஆய்வு செய்ய, தடயவியல் துறையில், பிரத்யேக பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, நான்கு ஆண்டுகளில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை, போலீசார் பதிவு செய்துள்ளனர். இதில், பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த, 'போக்சோ' வழக்குகளில், அறிவியல் ரீதியான ஆய்வுகள் நடத்தி, குற்றத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் போலீசார் உள்ளனர்.

இதில், காலதாமதம் ஏற்பட்டால், விசாரணையில் தேக்கம் ஏற்பட்டு விடுகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, குறித்த காலத்தில் நீதி கிடைப்பது இல்லை. இதனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ வழக்குகள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய, சென்னை டி.ஜி.பி., அலுவலகம் அருகே உள்ள, தடயவியல் துறையில், 3 கோடி ரூபாய் செலவில், பிரத்யேக பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

Advertisement